பால் உற்பத்தியைப் பெருக்கி, லாபம் தரும் தொழில்நுட்பம்!

Embryo Transfer Technology

உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடு என்றும், இரண்டாவது மிகப்பெரிய கால்நடைத் தொகையைக் கொண்ட நாடு என்றும் இந்தியா பெயர் பெற்றுள்ளது. இருப்பினும் சிறந்த முறையில் பால் உற்பத்தி செய்யும் சர்வதேச நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் ஒவ்வொரு மாட்டிலிருந்தும் பெறப்படும் பாலின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. அமெரிக்கா, ஒரு மாட்டிலிருந்து நாள் ஒன்றிற்கு 31.4 லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது, இஸ்ரேல் - 37.4 லிட்டர், இங்கிலாந்து - 24.7 லிட்டர். இந்தியாவிலோ ஒரு நாட்டு மாட்டின் பால் உற்பத்தி ஒரு நாளுக்கு ruhrhpahf 2.54 லிட்டராகவும், கலப்பின மாடு மூலம் கிடைக்கும் பால் உற்பத்தி ஒரு நாளுக்கு 7.15 லிட்டராகவும் மட்டுமே உள்ளது.

மாடுகளைக் கருவுறச் செய்யும்போது, விந்தின் தரத்துக்கு முக்கியமளிக்காமல், சினைப்பிடித்தலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கம் நம் நாட்டில் நிலவி வருகிறது. இவ்வாறான தரமற்ற விந்து மற்றும் முறையற்ற இனப்பெருக்க முறைகளால் தாழ்ந்த மரபணு கொண்ட கால்நடைகள் உருவாகின்றன. இதனால் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதோடு, இவற்றின் பாலில் காணப்படும் புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து குறைவாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும் நுட்பம்...

Embryo Transfer Technology

நம் நாட்டில் விவசாயம் பொய்த்துப்போனாலும், விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உபாயமாக இருந்துவருவது பால் உற்பத்தி. சுமார் 70 சதவிகித இந்திய விவசாயிகள் பால் உற்பத்தி செய்பவர்களாகவும் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தில் பால் உற்பத்தி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் விதத்தில் 'கரு பரிமாற்றுத் தொழில்நுட்பம்' (எம்ப்ரியோ டிரான்ஸ்பர் டெக்னாலஜி - Embryo Transfer Technology) எனும் தொழில்நுட்ப உத்தியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறது இந்திய அரசாங்கம். இந்த எம்ப்ரியோ டிரான்ஸ்பர் எனப்படும் கரு பரிமாற்றுத் தொழில்நுட்பத்தின் உதவியோடுதான் மற்ற நாடுகளும் அதிக பால் உற்பத்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறையில் உயர் மரபணு கொண்ட மாடுகள் மற்றும் காளைகளிலிருந்து முறையே பெறப்படும் சினை முட்டை மற்றும் விந்துவைக் கொண்டு செயற்கை கருத்தரித்தல் (In-Vitro Fertilization) தொழில்நுட்பம் மூலம் கரு உருவாக்கப்படுகிறது (இங்கே உயர் மரபணு கொண்ட மாடு என்பது அதிக பால் உற்பத்தித் திறன் உடையதாகும்). இந்தக் கருவை நமக்கு வேண்டிய பசுவின் கருப்பையில் செலுத்தி வளர்க்கலாம். இம்முறையில் பிறக்கும் மாட்டின் பால் உற்பத்தித் திறன் அதிகமாக இருக்கும்.

Tropical Animal Genetics

கரு பரிமாற்று தொழில்நுட்பம் மூலம் மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனம் 'Tropical Animal Genetics'. எங்கள் நிறுவனத்தில் அரசால் சான்றளிக்கப்பட்ட உயர் மரபணு கொண்ட, அதிக பால் உற்பத்தி தரும் கால்நடைகளிலிருந்து கருக்கள் உருவாக்கப்படுகின்றன. கரு பரிமாற்று முறை, உயர் மரபணு பரிமாற்றத்துக்கு 100% உத்தரவாதம் அளிக்கக்கூடியது. இம்முறை மூலம் பிறக்கும் பசுக்களுக்கு உயர்ந்த மரபணு இருப்பதோடு, அவற்றின் பால் உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்கும். இந்த மாடுகள் சாதாரண மாடுகளைவிட 25% - 30% குறைவான தீவனம் உண்டு, அதைவிட அதிகளவு பாலை உற்பத்தி செய்யக்கூடியவையாகும். மேலும், எங்கள் நிறுவனத்தில் பாலின அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட விந்து (Sex Sorted Semen) மூலம் கருக்கள் உருவாக்கப்படுவதால், அவற்றிலிருந்து பசுங்கன்றுகள் பிறக்கவே 90% வாய்ப்புள்ளது.

எங்களின் முறை மூலம், ஒரு தூய ரக நாட்டு இனப் பசுவின் (Pure Indingenous Breed) ஒரு நாள் பால் உற்பத்தியை 13 முதல் 15 லிட்டராக அதிகரிக்க முடியும். இரண்டு தூய ரக கால்நடைகளிலிலிருந்து உருவான முதல் தலைமுறை கலப்பினமான எஃப்1 (F1) மாடுகளின் பால் உற்பத்தியை 20 முதல் 30 லிட்டராகவும், அயல்நாட்டு இன மாடுகளின் பால் உற்பத்தியை 30 லிட்டருக்கு மேலாகவும் உயர்த்த முடியும். தூய ரக நாட்டு மாடு, கலப்பின மாடு, மற்றும் அயல்நாட்டு இன மாடுகளின் கருக்களைப் பெற விரும்புவோர் மற்றும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர் எங்களை அணுகலாம்.

மொபைல் / வாட்ஸ் ஆப்: +91 7337441606
இ-மெயில்: sales@taggnx.com